Wednesday, July 4, 2007

நண்பர் ஒருவர் சொன்ன கதை

கடலோரத்தில் ஒரு கிராமம். பக்கத்தில் ஒரு சின்ன மலை. பெரும்பாலான மக்கள் கடல் பக்கத்தில் மலை அடிவாரத்தில் தான் வசித்து வந்தனர். ஒருவர் மட்டும் மலை உச்சியில் குடியிருந்தார். அவர் கீழே உள்ள மக்களுக்கு பல உதவிகள் செய்து வருவார். ஊர் மக்கள் எல்லாரும் அவரிடம் நல்ல மதிப்பு வைத்திருந்தனர்.
ஒருநாள் மலை உச்சியில் இந்த பெரியவர் கடலை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த போது திடீரென்று கடல் நீர் பின்னால் போவதை பார்த்தார். அவருக்கு இந்த மாதிரி கடல் பின் வாங்கினால் மீண்டும் பெரிதாக பொங்கும் என்று தெரிந்திருந்தது. ஆனால் அவர் மலை மேலிருந்து கீழே வந்து எல்லோரையும் கூட்டிக்கொண்டு மீண்டும் மலை மீது ஏற நேரம் இல்லை.
அதனால் உடனே தன் வீட்டிற்கு நெருப்பு வைத்து விட்டார். மலை மேல் அவர் வீடு பற்றி எரிவதைப் பார்த்த ஊர் மக்கள் அவருக்கு உதவி செய்ய மலைக்கு அவசரமாக ஏறி வந்தனர். அவர்கள் மலைக்கு மேலே வந்தவுடன் கீழே கடல் பொங்கி ஊரை அழித்துக் கொண்டு போய் விட்டது.

No comments: