டிப்ஸ்ஸ்..
இன்டர்நெட் தளங்களில் தகவல்களைத் தேடுகையில் பிரவுசர் பல தற்காலிக போல்டர்களையும் பைல்களையும் உருவாக்குகிறது. நீங்கள் பிரவுஸ் செய்து முடித்த பின்னரும் அவை உங்கள் கம்ப்யூட்டரில் இடம் பெறுகின்றன. சில வேளைகளில் நீங்கள் அறியாமல் சில வைரஸ் பைல்கள் அல்லதுஅவை குறித்த தகவல்கள் இங்கே அமர்ந்துவிடும். இதை தடுக்க.....1. இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் தொகுப்பில் டூல்ஸ் (Tools) மெனு செல்லவும். அதில் உள்ள இன்டர்நெட் ஆப்ஷன்ஸ் (Internet Options) என்னும் பிரிவைக் கிளிக் செய்திடவும்.2. பின் அட்வான்ஸ்டு (Advanced) என்னும் டேபைக் கிளிக் செய்திடவும்.3. இதில் Security என்னும் பிரிவில் Empty Temporary Internet File என்ற இடத்தைக் கண்டறியவும். இதன் செக் பாக்ஸில் டிக் அடையாளம் ஏற்படுத்தவும்.4. பின் Apply பட்டனை அழுத்தி வெளியேறவும்.

ஈமெயிலில்

ஈமெயிலில் ஹெட்டர்ஸ் என்று ஒரு பகுதி உண்டு. சாதாரணமாக நாம் ஈமெயில் படிக்கும் பொழுது மேலே தலைப்பில் அது எப்போது வந்தது, யார் அனுப்பியது, யாருக்கு அனுப்பப்பட்டது என்ன பொருள் என்ற விவரங்கள் இருக்கும். ஆனால் இதற்கு மேலும் சில விவரங்கள் ஈமெயிலில் இருக்கும். நாம் கேட்காமல் பெரும்பாலான ஈமெயில் வாசிக்கும் மென்பொருள்கள் அதை காண்பிக்காது. இதை Full Headers என்று குறிப்பிடுவார்கள். எப்போதாவது நேரம் கிடைக்கும் போது இதைப் பார்த்து என்ன மாதிரி மேல் விவரங்கள் இருக்கின்றன என்று பாருங்கள். நீங்கள் yahoo உபயோகிப்பவர் என்றால் வலது பக்கம் ஓரத்தில் இந்த Full Headers என்ற சுட்டி இருக்கும்.

நண்பர் ஒருவர் சொன்ன கதை

கடலோரத்தில் ஒரு கிராமம். பக்கத்தில் ஒரு சின்ன மலை. பெரும்பாலான மக்கள் கடல் பக்கத்தில் மலை அடிவாரத்தில் தான் வசித்து வந்தனர். ஒருவர் மட்டும் மலை உச்சியில் குடியிருந்தார். அவர் கீழே உள்ள மக்களுக்கு பல உதவிகள் செய்து வருவார். ஊர் மக்கள் எல்லாரும் அவரிடம் நல்ல மதிப்பு வைத்திருந்தனர்.
ஒருநாள் மலை உச்சியில் இந்த பெரியவர் கடலை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த போது திடீரென்று கடல் நீர் பின்னால் போவதை பார்த்தார். அவருக்கு இந்த மாதிரி கடல் பின் வாங்கினால் மீண்டும் பெரிதாக பொங்கும் என்று தெரிந்திருந்தது. ஆனால் அவர் மலை மேலிருந்து கீழே வந்து எல்லோரையும் கூட்டிக்கொண்டு மீண்டும் மலை மீது ஏற நேரம் இல்லை.
அதனால் உடனே தன் வீட்டிற்கு நெருப்பு வைத்து விட்டார். மலை மேல் அவர் வீடு பற்றி எரிவதைப் பார்த்த ஊர் மக்கள் அவருக்கு உதவி செய்ய மலைக்கு அவசரமாக ஏறி வந்தனர். அவர்கள் மலைக்கு மேலே வந்தவுடன் கீழே கடல் பொங்கி ஊரை அழித்துக் கொண்டு போய் விட்டது.